தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் |

தென்னிந்திய சினிமாவில் குணசித்ர நடிகராக இருப்பவர் மோகன் சர்மா. தமிழில் ஏணிப்படிகள், கண்ணெதிரே தோன்றினாள். அப்பு, பிரண்ட்ஸ், சச்சின், தவம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கிராமம் என்ற மலையாள படத்தையம், நம்ம கிராமம் என்ற தமிழ் படத்தையும் இயக்கி உள்ளார். இந்த படம் கேரள அரசின் விருதை பெற்றது.
மோகன் சர்மா நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
ஒரு நாள் நான் வெளியில் போக எனது காரை எடுத்தேன். அப்போது மர்ம நபர் ஒருவர், எனது வீட்டு முன்பு காரை நிறுத்திக்கொண்டு எடுக்க மறுத்தார். காரை எடுக்கச் சொன்னபோது, அந்த நபர் என்னிடம் சண்டை போட்டார். மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, இரும்பு கம்பியால் என்னை தாக்க முற்பட்டார். அவர் மீது சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன். என்றார்.