'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
வாரிசு நடிகை என்கிற அடையாளத்துடன் சினிமாவில் களமிறங்கியவர் தான் இயக்குனர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி.. தெலுங்கில் அறிமுகமானாலும் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தான் பிஸியாக நடித்து வருகிறார் கல்யாணி. சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழில் வெளியான மாநாடு, மலையாளத்தில் வெளியான ஹிருதயம் மற்றும் ப்ரோ டாடி ஆகிய மூன்று படங்களுமே வெற்றி பெற்றதால் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்றுள்ளார்.
தவிர சோஷியல் மீடியாவிலும் கல்யாணி பிரியதர்ஷன் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். ரசிகர்களுடன் அவ்வப்போது கேள்வி பதில் உரையாடல் நடத்திவரும் கல்யாணி, தனது படம் குறித்த அப்டேட் தகவல்களையும் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அந்தவகையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இந்த தகவலை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தி உள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.