'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி | டாம் குரூசுக்கு சிறப்பு ஆஸ்கர் விருது அறிவிப்பு | பிளாஷ்பேக்: டி.ராஜேந்தர் 2 வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: புராண படங்களில் நடித்து புகழ்பெற்ற பாலசுப்பிரமணியம் | கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! |
பேஷன் என்ற பெயரில் விதவிதமான ஆடைகளை திரைப்படங்களில் நடிகைகள் அணிவது வழக்கம். கவர்ச்சியாக, கிளாமராக அணிந்தால், ஒரு வேளை அவை எல்லை மீறியதாக இருந்தால் சென்சார் அவற்றைப் பார்த்துக் கொள்ளும். ஆனால், நிஜ வாழ்வில் அப்படி அணியும் போது அவை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தும்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது மும்பையில் உள்ளார். அங்கு பாலிவுட் படங்களுக்கான பேச்சு வார்த்தைகளில் அவர் ஈடுபட்டு வருவதாகச் சொல்கிறார்கள். 'த பேமிலி மேன் 2' மற்றும் 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது சமந்தாவை பாலிவுட்டிலும் பிரபலமாக்கியுள்ளது.
இந்நிலையில் மும்பையில் ஒரு சலூனிற்கு வந்த சமந்தாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சமந்தா அணிந்துள்ள டீ ஷர்ட்டில், ஆங்கிலத்தில் மோசமான கெட்ட வார்த்தை ஒன்றை வைத்து எழுதப்பட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. பொதுவெளியில் இப்படியான வாசகங்களுடன் ஆடை அணிவது இளம் தலைமுறையினரிடமும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமந்தாவுக்குத் தெரியாதா ?.