நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

'திரு திரு துறு துறு' படத்தில் அறிமுகமான ஜனனி அய்யரை அடையாளம் காட்டியது பாலா இயக்கிய 'அவன் இவன்'. அதன் பிறகு பல படங்களில் நடித்தவர் பின்பு மலையாளத்துக்கு சென்றார். அங்கு சில படங்களில் நடித்து விட்டு மீண்டும் தமிழுக்கு வந்தவர் அதே கண்கள், பலூன் படங்களில் நடித்தார். கடைசியாக அவர் விதி மதி உல்டா படத்தில் நடித்தார் . இந்த படம் வெளிவந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் யோகிபாபு நடித்த தர்மபிரபு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
ஜனனி நடித்துள்ள கசட தபற, தொல்லைக்காட்சி, வேஷம், பகீரா, யாக்கை திரி, முன்னரிவான் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இதில் சில படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. சில பாதியில் நிற்கிறது. இந்த நிலையில கூர்மன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறர்.
பிரையன் பி ஜார்ஜ் இயக்கும் இந்த படத்தில் ராஜாஜி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எம்.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைக்க, சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்கிறார். இது ஒரு த்ரில்லர் வகை படமாகும்.