நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி தமிழ் சினிமாவுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் மிகவும் நெருக்கமானவர். சென்னை சூப்பர் கிங்ஸ அணிக்கு விளையாடுவதன் மூலம் இன்னும் நெருக்கம் அதிகமானது.
நடிகர் விஜய், தோனியின் நெருக்கமான நண்பர் அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளம்பர தூதுவராக கூட விஜய் இருந்தார். சமீபத்தில்கூட தோனி படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை சந்தித்தார்.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டி தொடர்பாக சென்னை வந்த தோனியை நடிகர் விக்ரம் சந்தித்து பேசி உள்ளார். சந்திப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. என்றாலும் தற்போது கிரிக்கெட்டில் இருந்து சற்று விலகி இருக்கும் அவரை வைத்து படம் எடுக்கும் நோக்கம் எதுவும் விக்ரமிற்கு இருக்கலாம், அல்லது விக்ரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தூதுவராகலாம், அல்லது மகான் படத்தை பார்க்க அழைத்திருக்கலாம் என்று சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.