பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் 'டான்'. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் இது.
இப்படம் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், லைக்கா நிறுவனம் தமிழில் வெளியிடும் பிரம்மாண்டத் தயாரிப்பான ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தை அதே மார்ச் 25ம் தேதியில் வெளியிடுவதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பத்து நாட்களுக்கு முன்பாக 'ஆர்ஆர்ஆர்' படத்தை மார்ச் 18 அல்லது ஏப்ரல் 25 ஆகிய இரு தேதிகளில் ஒரு தேதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று அறிவித்திருந்தார்கள். அந்த இரண்டு தேதியிலும் இல்லாமல் புதிய தேதியாக மார்ச் 25ம் தேதி என நேற்று படத்தின் வெளியீட்டை திடீரென அறிவித்துள்ளார்கள்.
லைக்கா நிறுவனம்தான் 'ஆர்ஆர்ஆர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு படங்களையும் தமிழகத்தில் வெளியிட உள்ளது. கடந்த மாதம் ஜனவரி 7ம் தேதியே வெளியாக வேண்டிய படம் 'ஆர்ஆர்ஆர்'. அதற்காக மாநிலம் முழுவதும் தியேட்டர்களையும் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். கடைசி நேரத்தில் ஒமிக்ரான் தொற்றால் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இப்போது 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகும் நாளிலேயே 'டான்' படத்தை வெளியிட தியேட்டர்காரர்களும், வினியோகஸ்தர்களும் சம்மதிக்க வாய்ப்பில்லை. அதனால், 'டான்' பட வெளியீட்டை தள்ளி வைக்க கோரிக்கை வைப்பார்கள். மேலும், 'ஆர்ஆர்ஆர்' படத்துடன் போட்டியிட பலரும் யோசிப்பார்கள். என்ன நடக்கும் என்று விரைவில் தெரிந்துவிடும்.