படம் இயக்க தயாராகும் கீர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் | சபரிமலை தங்க தகடு திருட்டு வழக்கில் ஜெயராமிடம் விசாரிக்க முடிவு | பிளாஷ்பேக்: பாண்டியராஜன் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை | பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா? | தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! |

மறைந்த பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன். இவர் விஜய் நடித்த சச்சின் என்ற படத்தை இயக்கியவர். அதன் பிறகு சேட்டை, காஸ்மோரா என சில படங்களுக்கு வசனம் எழுதினார். அடுத்தபடியாக அவருக்கு படம் இயக்குவதற்கு வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கேசினோ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். புதுமுக இயக்குனர் மார்க் ஜோயல் இயக்கும் இப்படத்தில் வாணி போஜன், ரங்கராஜ் ஆகியோருடன் ஜான் மகேந்திரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.




