சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி |

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படம் ஹேய் சினாமிகா. நடன இயக்குனர் பிருந்தா முதன் முறையாக இயக்கும் படம். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடித்துள்ளனர். தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 25ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் முதல் பாடலாக அச்சமில்லை... அச்சமில்லை வெளியானது. இதனை துல்கர் சல்மான் பாடி இருந்தார். தற்போது இரண்டாவது பாடலாக, காதலியை தோழியாக வர்ணிக்கும் மெலடி பாடல் 'தோழி...'வெளியாகி உள்ளது. இதனை மதன் கார்க்கி எழுதி உள்ளார். பிரதீப் குமார் பாடி உள்ளார்.
பாடல் குறித்து இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா கூறியதாவது: இந்தப் படத்தில் மட்டுமல்ல, என்னுடைய கேரியரிலும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று 'தோழி'. படப்பிடிப்பிற்கு 6 மாதங்களுக்கு முன்பு பிருந்தா மாஸ்டரைச் சந்தித்தபோது, ஒரு நல்ல மெலடியை விரும்புவதாக சொன்னார். இந்த பாடலை அவர் காட்சிப்படுத்தியுள்ள விதம் மிகவும் அருமை. என்றார்.
பாடலை பற்றி பிருந்தா மாஸ்டர் கூறியதாவது: 'அச்சமில்லை' பாடல் ஒரு உற்சாகமான நடனக் கலவை என்றால், 'தோழி' உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். இந்த பாடல் மிகவும் அழகாக உருவெடுத்துள்ளது. கேட்பவர்களின் சொந்த உறவுகளை நினைவுபடுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. துல்கர் மற்றும் காஜல் மிகவும் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். நட்புக்கான இந்த இதயப்பூர்வமான இசை அஞ்சலியுடன் ரசிகர்கள் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன். என்றார்.




