விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு | அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வாழ்த்திய ரஜினி |
மாநாடு படத்தை அடுத்து வெந்து தணிந்தது காடு, பத்துதல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடிக்கிறார் சிம்பு. இந்த நிலையில் சிம்புவுக்கு பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக வெளியான செய்தியை சிம்பு ரசிகர்களை வைரலாக்கி வருகிறார்கள்.
மேலும், திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார். அவரது இந்த சாதனையை பாராட்டி ஐசரி கணேசனின் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐசரி கணேசன்தான் கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.