ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமின் மகன் துருவ். தெலுங்கு அர்ஜூன் ரெட்டியின் ரீமேக் மூலம் அறிமுகமானார். இயக்குனர் பாலா வர்மா என்ற பெயரில் முதலில் இந்த படத்தை இயக்கினார். ஆனால் தயாரிப்பு தரப்புக்கு திருப்தி அளிக்காத தால் இந்த படம் கைவிடப்பது. பின்னர் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ஒரிஜினல் படத்தின் இணை இயக்குனரே இயக்க வெளியானது. இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை பனிதா சந்து.
துருவ் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் நடிகை பனிதா சந்துடன் எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்தால் இவர்கள் துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் ஒரு ஹோட்டல் அறையில் நின்று துபாயின் புர்ஜ் காலிபாவை பனிதா சந்து ரசிக்கும் மாதிரியான புகைப்படம் உள்ளது.
இவர்கள் இருவரும் துபாயில் புத்தாண்டு கொண்டாடியதாகவும், அதற்கான வீடியோ, புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நீங்கள் டேட்டிங் செய்து வருகிறீர்களா? என்றும், இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்களா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனால், இதற்கு இருவர் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த 'சர்தார் உத்தம்' என்னும் திரைப்படத்தில் பனிதா சந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.