பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் |
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வரவுள்ளது கணம். சர்வானாந்த், ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழில் சதீஷ், ரமேஷ் திலக் நடித்த கேரக்டரில், தெலுங்கில் வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி நடித்துள்ளனர். ஸ்ரீகார்த்திக் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார்.
படம் பற்றி ஸ்ரீகார்த்திக் கூறியதாவது : அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் பிக்ஷன் படம் தான் கணம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கியுள்ளேன். சின்ன பட்ஜெட் படமாக தொடங்கப்பட்டு, தற்போது சயின்ஸ் பிக்ஷன் மற்றும் இரண்டு மொழிகளின் படபிடிப்பு செலவு உள்ளிட்டவைகளால் பெரும் பொருட்செலவு கொண்ட படமாக மாறியிருக்கிறது.
இதில் அம்மா வேடத்தில் அமலா நடித்துள்ளார். இந்தக் கதையை அவரை மனதில் வைத்தே எழுதினேன். 25 வருடங்களாக நடிக்காமல் இருந்தவர், இந்தக் கதையைக் கேட்டவுடன் ஒப்புக் கொண்டார். படம் பார்ப்பவர்கள் அனைவரது மனதிலும், அவரவர்களின் நிஜ அம்மாவை நினைவு கூர்வார்கள்.
கணம் படத்தின் சிறப்பே அம்மா பாசத்துக்குள் சயின்ஸ் பிக்ஷன் கலந்திருப்பது தான். இந்தப் படம் அம்மாவை இழந்தவர்களுக்கு மீண்டும் அம்மாவை ஞாபகப்படுத்தும். படம் முடிந்ததும் அம்மாவிடம் பேசத் தோன்றும். அம்மாவை நேரில் பார்த்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கத் தோன்றும்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சயின்ஸ் பிக்ஷன் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். தெலுங்கில் ஒகே ஒக ஜீவிதம் என்ற பெயரில் வெளியாகிறது என்றார்.
கசிந்த வரையில் கதை இதுதான் : சர்வானந்த் அம்மாவை மதிக்காத பொறுப்பில்லாத மகன். திடீரென அம்மா இறந்து விட அதன் பிறகு தான் அம்மாவின் அருமையை உணர்கிறார். இந்த நிலையில்தான் டைம் மிஷன் மூலம் பல வருடங்களுக்கு பின்னால் சென்று அம்மாவுடன் வாழத் தவறிய ஒரு அன்பான வாழ்க்கையை வாழ்கிறார். இதுதான் கதை என்கிறார்கள்.