விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! |
நயன்தாரா-விக்னேஷ்சிவனின் ரவுடி பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ராக்கி. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தின் புரோமோவில் ரத்தம் சொட்டும் வகையிலான ஒரு கெட்டப்பில் நயன்தாராவும் நடித்திருந்தார். இந்த படத்தில் வசந்த்ரவி, பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 23ந் தேதி வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ராக்கி படத்தை பார்த்த ரஜினிகாந்த், இயக்குனர் பாரதிராஜா, நடிகர் வசந்த் ரவி ஆகியோரை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டியிருக்கிறார். அதையடுத்து ராக்கி படத்தை வெளியிட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியிருக்கிறார்.
அதுகுறித்து விக்னேஷ்சிவன் தெரிவிக்கையில், இன்று தலைவர் ரஜினி அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது. நயன்தாராவுக்கும் எனக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தலைவர் சொன்ன மனஉறுதியை வார்த்தைகளால் விளக்க முடியாது, என்று அவர் தெரிவித்துள்ளார்.