பிளாஷ்பேக்: முதல் அம்மன் படம் | 'ராமாயணா' படத்தில் ரஹ்மானுடன் இணைந்த ஹாலிவுட் 'ஆஸ்கர்' நாயகன் | 'மண்டாடி' யார்? : இயக்குனர் விளக்கம் | பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் |
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'சலீம்' திரைப்படம், விமர்சன ரீதியில் பாராட்டுக்களை குவித்தது. தற்போது ‛மழை பிடிக்காத மனிதன்' என்னும் படத்தில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் எழுதி, இயக்குகிறார். ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம், டாமன் & டையூ பகுதியில் படமாக்கப்பட உள்ளது. அங்கு படமாக்கப்படும் முதல் தமிழ்படம் இதுவாகும்.
இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். சரத்குமார் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோரும் நடிக்கின்றனர். கன்னட திரையுலகின் தனஞ்செயா, ப்ருத்வி அம்பர் ஆகிய இரு நடிகர்களும் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்கள். 2022ம் ஆண்டு மத்தியில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.