அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்திற்கான பிரமோஷன் வேலைகளை படக்குழு சரியாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. கடந்த ஒரு வாரமாக மும்பையில் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் பல சேனல்களுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டிகளைக் கொடுத்தனர். அடுத்த மொழிகளுக்கு அடுத்து செல்ல உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் புகழ் பெற்ற டைம் ஸ்கொயரிலும் விளம்பரப்படுத்தியுள்ளனர். அங்குள்ள டிஜிட்டல் போர்டில் பட விளம்பரம் இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஐந்து மொழிகளில் இப்படம் 2000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படம் சுதந்திரப் போராட்ட காலத்து கதை என்பதால் சர்வதேச அளவில் இப்படத்தை ரசிப்பதில் எந்தத் தடையும் இருக்காது. அமெரிக்கா மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் அதிகமான தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.