ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா | மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் |
மலையாள சினிமாவில் மம்முட்டி வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்த படம் தான் 'ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு'. சொல்லப்போனால் இந்த படம்தான் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் மம்முட்டியை கொண்டு சேர்த்தது. 1988-ல் வெளியான இந்த படத்தை தொடர்ந்து சீரான இடைவெளிகளில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் ஜாக்ரதா, சேதுராம ஐயர் சிபிஐ, நேரறியான் சிபிஐ என மொத்தம் நான்கு பாகங்கள் இந்த 33 வருடங்களில் வெளியாகியுள்ளன. ஒரு மிகப்பெரிய இடைவெளிக்குப்பின் இதன் ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.
இதன் நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் மது தான் இந்த 5ம் பாகத்தையும் இயக்குகிறார்.. தமிழில் மௌனம் சம்மதம் என்கிற படத்தை இயக்கியவர் இவர்தான். இந்த நான்கு பாகங்களுக்கும் கதை எழுதிய பிரபல சீனியர் கதாசிரியர் எஸ்.என்.சுவாமி தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.
பொதுவாகவே தொடர் பாகங்களாக எடுக்கப்படும் படங்களில் அதில் நடித்த முக்கிய நடிகர்கள் தொடர்ந்து இடம் பெறுவது உண்டு, அப்படி இந்த நான்கு பாகங்களிலும் மம்முட்டியுடன் நடிகர்கள் முகேஷ் மற்றும் நகைச்சுவை நடிகர் ஜெகதிஸ்ரீகுமார் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். முகேஷ் இந்த ஐந்தாம் பாகத்தில் நடிப்பது ஏற்கனவே உறுதியான நிலையில் ஜெகதிஸ்ரீகுமார் இதில் நடிப்பாரா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது.
காரணம் கடந்த 2012ல் கார் விபத்தில் சிக்கிய ஜெகதிஸ்ரீகுமார் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி குணமடைந்தாலும் அதன்பின் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை.. இந்தநிலையில் இந்த ஐந்தாம் பாகத்தில் அவரும் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது, அவரது வசதிக்காக பல காட்சிகளை அவரது வீட்டிலேயே படமாக்க முடிவு செய்துள்ளார்களாம்.