கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை |
நாயகி திவ்யபாரதியும், கோயம்புத்துார் பொண்ணு. 2015ல் நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். மாடல் அழகியாக வலம் வந்த அவர், சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இப்போது, ஹீரோயினாகி இருக்கிறார்.அவருடனான சந்திப்பில் இருந்து...
முதல் படத்திலேயே ஹீரோயினாக நடித்த அனுபவம் பற்றி?
ஹீரோயினாக நடித்ததில் மிகுந்த சந்தோஷம். எனது பங்களிப்பை பொறுப்புடன் நிறைவேற்றி உள்ளேன். ரசிகர்களிடம் இருந்து, 'பாசிட்டிவ் ரெவ்யூ' கிடைச்சிருக்கு.
நடிப்புக்கு முன் ஏதாவது பயிற்சி மேற்கொண்டீர்களா?
படத்துக்காக எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. 'பேச்சுலர்' படத்துக்கு, 30 நாள் 'ஒர்க் ஷாப்' நடந்தது. அதில் யாருக்கும் வேலை கொடுக்கவில்லை. இயக்குனர் அறிவுரைக்கேற்ப, படப்பிடிப்பின்போது, 'நேச்சுரலாக' செயல்பட்டோம்.
இன்றைய பெண்களில் பலரும் 'மாடலிங்' தேர்வு செய்வதேன்...
சினிமா என்றால் இளைஞர்களுக்கு பிடிக்கும் தானே! 'மாடலிங்' வாயிலாக தங்களை அழகாக காட்டிக்கொள்ள நினைப்பார்கள். சமூக வலைதள பயன்பாடு அதிகரித்துள்ளதால், சினிமா, 'மாடலிங்' வாய்ப்பு எளிதாகி விட்டது. யார் வேண்டுமானலும் எளிதாக நடிக்க முடிகிறது. இன்றைய பெற்றோர் மனநிலை மாறியிருப்பதால், திரைப்படங்களில் நடிக்க பெண்கள் முன்வருகின்றனர்.
சினிமா துறையில் எந்த நடிகருடன் நடிக்க ஆசை?
நல்ல கதை கிடைத்தால், 'ஓகே'. தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பேன். இந்த ஹீரோவுடன் தான் நடிக்க வேண்டுமென்கிற ஆசை எதுவும் இல்லை.
அடுத்து எத்தனை படங்களில் நடிக்கிறீர்கள்?
'பிக்பாஸ்' முகின் மற்றும் கதிர் ஆகியோருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் பெயர் வைக்கவில்லை. 'நியூ இயருக்கு' திரைக்கு வருமென, நினைக்கிறேன்.