'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
ராஜமவுலி இயக்கத்தில் மரகதமணி இசையமைப்பில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவகன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. 2022 ஜனவரி மாதம் 7ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் டிரைலரை வெளியிடவில்லை என படக்குழு விளக்கமளித்தது.
இந்த நிலையில், தற்போது ‛ஆர்ஆர்ஆர்' படத்தின் புதிய டிரைலர் தேதியாக டிசம்பர் 9ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில், டிரைலரை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.