லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நந்தினி. தனது நகைச்சுவையான நடிப்பினால் இன்று சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து மைனா நந்தினி என்ற அடைமொழியுடன் வலம் வருகிறார். சின்னத்திரை வெள்ளித்திரை என பிஸியாக நடித்து வரும் மைனா, பியூட்டி மற்றும் பிட்னஸை சூப்பராக மெயின்டெயின் செய்து வருகிறார். சமீபத்தில் தனது டயட் குறித்தும் அழகுக்கான ரகசியம் குறித்தும் வீடியோ ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதுபோலவே மைனா ஒர்க் அவுட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஜிம் சூட்டில் ஒரு காலை தூக்கி ரொம்ப கடினமான ஸ்ட்ரெச்சை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் நெட்டிசன்கள் 'பிட்னஸ் ப்ரீக்கா இருக்கீங்களே! ஹீரோயின் ஆக போறீங்களா?' என்று கேட்டு வருகின்றனர்.