பார்த்திபன், சுமா ரங்கநாத், மோகினி நடித்த உன்னை வாழ்த்தி பாடுகிறேன். அர்ஜூன், மீனா, ரம்பா நடித்த செங்கோட்டை. படங்களை இயக்கியவர் சிவி.சசிகுமார். இது தவிர 2 தெலுங்கு படங்களையும், சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கினார். 57 வயதான சசிகுமார் கடந்த சில ஆண்டுகளாக தொண்டை புற்றுநோய் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். நோயின் தீவிரம் அதிகரிக்கவே போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். சசிகுமாருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று இறுதி சடங்கு நடக்கிறது.