ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகத்தில் பலரும் பான் - இந்தியா படங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த இரண்டு மாதங்களுக்குள்ளாக 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம்' ஆகிய பான்-இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 'புஷ்பா, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் பாடல்களை மட்டும் யு-டியூபில் வெளியிட்டுள்ளார்கள். 'ராதே ஷ்யாம்' படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாக உள்ளது.
'புஷ்பா' படத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'சாமி சாமி' பாடல் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்தது. வித்தியாசமான டியூன், குரல், வரிகள், ராஷ்மிகாவின் கிளாமர் என இப்பாடல் ரசிகர்களிடம் உடனடியாக சென்று சேர்ந்தது. ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள இதன் தெலுங்குப் பாடல் 38 மில்லியன் பார்வைகள், தமிழ்ப் பாடல் 7 மில்லியன், மலையாளம் 2 மில்லியன், கன்னடம் 1 மில்லியன் என பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற பாடல் கடந்த வாரம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் யு-டியுபில் வெளியானது. கடந்த ஐந்து நாட்களில் இந்தப் பாடல் தெலுங்கில் 15 மில்லியன் பார்வைகள், தமிழில் 2 மில்லியன், கன்னடத்தில் 2 லட்சம், மலையாளத்தில் 1 லட்சம், ஹிந்தியில் 7 மில்லியன் பார்வைகள் என அடுத்த வரவேற்பைப் பெற்ற பாடலாக உள்ளது.
இந்த இரண்டு பாடல்களுக்கும் போட்டியாக அடுத்து பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தின் மூன்று முக்கிய படங்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்திய சினிமாவில் அடிக்கடி பேசப்படும் படங்களாக இருக்கப் போகிறது.