துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளர் ஆனவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். இதனால் குறுகிய காலத்தில் பாலிவுட், ஹாலிவுட் என்று வேகமாக வளர்ந்து விட்டார். அதோடு, ஆஸ்கர் விருதும் பெற்று உலக அளவில் பேசப்படும் இசையமைப்பாளரானார்.
இந்தநிலையில் தற்போது ரஹ்மான் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரஜினி படங்களுக்காக தான் கடினமாக உழைத்ததாக தெரிவித்துள்ளார். அதாவது ரஜினி நடிக்கும் படங்களை மார்ச் மாதத்தில் தொடங்கும் தயாரிப்பாளர்கள் தீபாவளிக்கே படம் ரிலீஸ் என்பார்கள். அதனால் படம் வெளியாகும் கடைசி நேரத்தில் பின்னணி இசையமைக்க சொல்வார்கள். இதனால் மற்ற நடிகர்களின் படங்களைவிட ரஜினி படங்களுக்காக பல இரவுகள் தூங்காமல் உழைத்தி ருக்கிறேன். அதுவும் எனது ஸ்டுடியோ அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி பவர்கட் ஆகும் என்பதால் ஜெனரேட்டர் உதவியுடன் பணியாற்றினேன். ரஜினி படம் என்பதால் மற்ற நடிகர்களின் படங்களை விட அவரது படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.