இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் |
பாய்ஸ் படத்தில் 5 நடிகர்களில் ஒருவராக அறிமுகமாகி தெலுங்கு பட உலகின் முன்னணி இசையமைப்பாளராக மாறியவர் தமன். தெலுங்கில் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன் படங்களுக்கு இசையமைத்து வரும் தமன் தமிழிலும் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்க இருக்கும் படத்துக்கு தமன் தான் இசை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூகவலைதளம் மூலம் பதில் அளித்துள்ளார் தமன். அதில் ஒரு அஜித் ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த தமன், " அஜித்துடன் வேலை பார்க்க ஆவலோடு இருப்பதாகவும், அஜித் தனக்கு மிகவும் பிடித்த நபர்" என்றும் பதில் அளித்துள்ளார்.
மேலும் ஒரு விஜய் ரசிகர், "தளபதி 66க்கு இசை நீங்களா?" என கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள தமன், இன்னும் முடிவாகவில்லை என பதிலளித்துள்ளார்.