‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு |
விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திராவிலும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. இதில் கேரளாவில் தமிழகத்துக்கு இணையாக ரசிகர்கள் இருக்கிறார்கள் . விஜய்யின் புதிய படங்கள் வெளியாகும் போது அவருக்கு மிகப் பெரிய அளவில் கட்அவுட், பேனர்களை வைத்து வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
அதன் காரணமாகவே விஜய்யின் ஒவ்வொரு படங்களும் தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் பெரிய அளவில் வசூலித்து வருகின்றனர். அதோடு, மாஸ்டர் படம் தமிழைப் போலவே மலையாளத்திலும் பெரிய அளவில் வசூலித்தது. இந்நிலையில், தற்போது கேரளாவில் திரையரங்குகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்கும் முயற்சியாக விஜய் நடித்த கில்லி படத்தை மீண்டும் வெளியிட்டுள்ளார்கள். இதேபோல் அடுத்தடுத்து விஜய்யின் இன்னும் சில சூப்பர் ஹிட் படங் களையும் மறு ரிலீஸ் செய்யவும் கேரளா தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்.