மீண்டும் சீரியஸ் கதையில் வடிவேலு? | நிஜத்திலும், சினிமாவிலும் அம்மா ஆன மந்திரா | அஜித்தின் 65வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | கூலி படத்தில் பஹத் பாசிலுக்கு உருவாக்கப்பட்ட வேடத்தில் சவுபின் ஷாகிர் | எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா | சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் நடிப்பது யார்? | 'தண்டட்டி' இயக்குனர் படத்தில் கவின் | அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ | ஆவேசம் பட இயக்குனரின் கதையில் புதிய படம் இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் | மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வந்த மாறன் படத்தில் நடித்து முடித்து விட்டார். மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் இந்த மாறன் படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் படம் குறித்த சில தகவல்கள் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், மாறன் படத்தின் ஆடியோ தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கிறது. இப்படத்திற்காக நான்கு பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டுள்ளது. மாறன் படத்திற்காக உருவாகியுள்ள தீம் மியூசிக் தனுஷ் ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கும். அதோடு மாறன் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.