பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
தமிழில் அஜித்துடன் மட்டுமே 'வீரம், வேதாளம், விஸ்வாசம்' என மூன்று ஹிட்டுகளைக் கொடுத்து இயக்குனர் சிவா முதல் முறையாக, ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற படம் 'அண்ணாத்த'. படம் கடந்த வாரம் வெளிவந்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. பலரும் பல விதங்களில் கிண்டலடித்து அவருடைய முந்தைய படங்களையும், வேறு சில படங்களையும் வைத்தே 'அண்ணாத்த' படத்தை எடுத்து முடித்துவிட்டார் என்றார்கள்.
தன் மீதான விமர்சனங்களைத் துடைக்க 'அண்ணாத்த' படத்திற்காக யார் யாரெல்லாம் பாசிட்டிவ்வாக டுவீட் போடுகிறார்களோ அவற்றையும், படத்தின் வசூல் பற்றி யார் யாரோ வெளியிடும் தகவல்களையும் கூட ரிடுவீட் செய்து வருகிறார்.
இதற்கு முன்பு அவரது படங்கள் வந்த போது கூட அவர் இப்படி செய்தது இல்லை. ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் தான் சரியாக படம் கொடுக்கவில்லை என்ற பேச்சு அவரது எதிர்காலத்திற்கும் மோசமான விளைவுகளைத் தரும். எனவே படத்தில் பங்காற்றிய மற்றவர்களை விடவும் இயக்குனராக அவரே களத்தில் இறங்கிவிட்டார்.