தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த படம் 'ஜேம்ஸ்'. சேத்தன் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் புனித் கதாநாயகனாக நடிக்க பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை புனித் முடித்துக் கொடுத்துவிட்டார். ஆனால், படத்திற்கான டப்பிங்கை அவர் பேசி முடிக்கவில்லை. எனவே, படப்பிடிப்பின் போது அவர் பேசியவற்றை டப்பிங் செய்யாமல் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
அதற்காக மும்பையில் உள்ள ஒலிப்பதிவு ஸ்டுடியோ ஒன்றை அணுக உள்ளார்களாம். புதிய டெக்னாலஜியின் மூலம் புனித் நேரடியாகப் பேசியவற்றை தரம் உயர்த்தி டப்பிங் பேசினால் என்ன ஒரு தெளிவு கிடைக்குமோ அதைக் கிடைக்க வைக்க முயற்சிக்கப் போகிறார்களாம்.
'யு டர்ன்' படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கத்தில் புனித் நடிப்பதாக இருந்த 'த்வித்வா' படம் இந்த மாதம் ஆரம்பமாவதாக இருந்தது. மேலும் சில படங்களிலும் அவர் நடிக்க முடிவு செய்திருந்தார். இவையனைத்தும் இப்போது கைவிடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு வந்துவிட்டது.
'ஜேம்ஸ்' படம்தான் புனித் ராஜ்குமார் நடித்து கடைசியாக வெளிவர உள்ள படமாக அமைய உள்ளது.