நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
உலகிலேயே உயரமான சிகரம் இமயமலையில் உள்ள எவரெஸ்ட். இமயமலை ஒரு தொடர் மலை. இதேபோல தனி மலைகளில் உயரமான சிகரம் தான்சானியா நாட்டில் உள்ள கிளிமஞ்சாரோ. இந்த மலையில் உள்ள ஒரு பழங்கால கிராமத்தில் தான் ரஜினி நடித்த எந்திரன் படத்தின் கிளிமாஞ்சாரோ என்ற பாடல் எடுக்கப்பட்டது.
இந்த மலையின் சிகரத்தில் ஏறுவது மலையேற்ற வீரர்களின் கனவாக இருக்கும். அப்படிப்பட்ட சிகரத்தில் ஏறி இந்திய கொடியை பெருமையுடன் தாங்கி பிடித்து திரும்பி இருக்கிறார் நடிகை நிவேதா தாமஸ். அவர் கிளிமஞ்சாரோ சிகரத்தில் தேசிய கொடியுடன் நிற்கும் படங்கள் இப்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சிகரத்தில் ஏற மலையேற்ற பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நிவேதா தாமஸ் 6 மாதங்கள் மலையேற்ற பயிற்சி பெற்ற பிறகே இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
நிவேதா தாமஸ் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த தர்பார், கமல்ஹாசன் நடித்த பாபநாசம், விஜய் நடித்த ஜில்லா மற்றும் நவீன சரஸ்வதி சபதம், போராளி உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சாதனை பயணங்கள் மேற்கொள்வது நிவேதா தாமசின் பொழுதுபோக்கு என்பது குறிப்பிடத்தக்கது.