தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது |
புதுச்சேரி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் பிரபல சினிமா இயக்குனர் ஷங்கரின் மருமகன், சம்பந்தி உள்ளிட்ட ஐந்து பேர் மீது, போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி, துத்திப்பட்டில் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான மைதானங்கள் உள்ளன. இங்கு நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அப்போதைய கவர்னர் கிரண்பேடி மைதானத்துக்கு சீல் வைக்க உத்தர விட்டார். மைதானம் மூடப்பட்டதால் முத்திரையர்பாளையத்தில் உள்ள இளங்கோவடிகள் அரசு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது பயிற்சியாளர் தாமரைக்கண்ணன்(23) தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் 16 வயது சிறுமி, கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் பயிற்சியாளரிடம் மோதல் வேண்டாம் என கூறியதுடன் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவிடம் அச்சிறுமி புகார் செய்தார். குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தி, மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். இதன்படி, பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் சீண்டல் வழக்கு பதியப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் மற்றொரு பயிற்சியாளர் ஜெயகுமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், செயலர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் உட்பட ஐந்து பேர் மீது நேற்று முன்தினம் போக்சோ பிரிவில் வழக்கு பதியப்பட்டது.
இதில் கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன் மகன் ரோகித், பிரபல திரைப்பட இயக்குனர் ஷங்கரின் மருமகன் ஆவார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. தலைமறைவான ஐந்து பேரையும் கைது செய்ய இரண்டு தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.