ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பாலிவுட் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ரோஹித் ஷெட்டி. தொடர்ந்து சல்மான்கான், ஷாரூக்கான், அஜய் தேவ்கன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வரும் ரோஹித் ஷெட்டி, சிங்கம் படத்தின் தொடர் பாகங்களை இயக்கி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர். இந்த நிலையில் ரோஹித் ஷெட்டியும் முதன்முறையாக வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை திருப்பி இந்தியன் போலீஸ் போர்ஸ் என்கிற வெப் சீரிஸை இயக்கியுள்ளார்.
சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடித்துள்ள இந்த வெப் சீரிஸில் விவேக் ஓபராய் முக்கிய வேடத்தில் நடிக்க, கதாநாயகியாக ஷில்பா ஷெட்டி ஒரு போலீஸ் கமாண்டோவாக நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்தில் ஒரு ஆச்சரியம் இருப்பதாக தற்போது கூறியுள்ளார் இயக்குனர் ரோஹித் ஷெட்டி.
அதாவது இந்த கதாபாத்திரத்தை முதலில் ஒரு ஹீரோ நடிப்பதாகத்தான் உருவாக்கி இருந்தாராம் ரோஹித் ஷெட்டி. ஆனால் எதற்காக வழக்கமாக கதாநாயகர்களையே நடிக்க வைக்க வேண்டும் என நினைத்த ரோஹித் ஷெட்டி. அப்படியே கதாநாயகி நடிக்கும் விதமாக மாற்றி விட்டார்.
அப்படி மாற்றியதுமே அதற்கு தோதாக ஷில்பா ஷெட்டி தான் அவரது மனதில் பளிச்சிட, அவர் எதிர்பார்த்தபடியே தற்போது இந்த வெப் சீரிஸில் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் ஷில்பா ஷெட்டி. மேலும் இயக்குனர் ரோஹித் ஷெட்டி கூறும்போது பாலிவுட்டில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு என இரண்டு கதாநாயகிகள் மட்டுமே உள்ளனர். அதில் ஒருவர் ஷில்பா ஷெட்டி என்று கூறியுள்ளார்.