உடற்கேலி : ஈஷா ரெப்பா வருத்தம் | பாரத், சான்வீயின் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை | இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | 'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ் | பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா | சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் |

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் மோகன்தாஸ் படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
களவு என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மோகன்தாஸ். விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து, தயாரிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் தொகுப்பு மற்றும் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடையில் மோகன் தாஸ் படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது 'மோகன்தாஸ்' படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நாயகன் விஷ்ணு விஷால் புதிரான- அழுத்தமான- அர்த்தத்துடன் கூடிய சிரிப்புடன் இருக்க, அவரது கையில் ரத்தம் தோய்ந்த ஆயுதம் ஒன்றும் இருக்கிறது. அத்துடன் மூன்று குரங்குகள் பொம்மைகளாக தொங்கிக் கொண்டிருக்கிறது. நான்காவதாக ஒரு குரங்கு வீழ்த்தப்பட்டுள்ளதைப் போல் அமைந்திருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.