அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
சதுரங்க வேட்டை படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்தவர் ராமச்சந்திரன். அதன் பிறகு பேட்ட உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும், காமெடி வில்லனாகவும் நடித்தார். தற்போது டேக் டைவர்ஷன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி இருக்கிறார். இதனை அறிமுக இயக்குனர் சிவானி செந்தில் இயக்கி உள்ளார்.
இன்னொரு நாயகனாக சிவகுமார் நடிக்கிறார், பாடினி குமார், காயத்ரி என்ற இரண்டு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் தவிர ஜான் விஜய், விஜய் டிவி ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைத்துள்ளார். ஈஸ்வரன் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சிவானி செந்தில் கூறியதாவது: 80களில் 90களில் மட்டுமல்ல 2000த்திலும் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல் கதையாக இது உருவாகி உள்ளது. ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க அனைவரையும் கவரும் முழுநீள எண்டர்டெய்னராக இருக்கும். என்றார்.