'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
மலையாள இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் உன்னி முகுந்தன். இவர் தமிழில் தனுஷின் சீடன் மற்றும் அனுஷ்கா ஜோடியாக பாக்மதி ஆகிய படங்களில் நடித்தவர். வருடத்திற்கு நான்கு படங்கள் நடித்தாலும் கூட இன்னும் தனக்கென ஒரு பிரேக் கிடைக்காமல் இருக்கும் உன்னி முகுந்தன் தற்போது மோகன்லாலுடன் இணைந்து 'டுவல்த் மேன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று தனது 34வது பிறந்தநாளை 'டுவல்த் மேன்' படப்பிடிப்பு தளத்தில் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் உள்ளிட்ட படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் உன்னி முகுந்தன். மோகன்லால் குறும்புடன் உன்னி முகுந்தனுக்கு கேக் ஊட்டும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.