விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் | அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' |
கேரளாவின் புன்குன்னம் என்கிற பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இருப்பவர் ருக்மிணி(வயது 80). மோகன்லாலின் தீவிர ரசிகையான இவர், அழுதபடி பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது. அதில், மோகன்லால் பெயரை வைத்து தன்னைப் பலரும் கிண்டல் செய்வதாகவும், அவரை சந்திக்க முடியவில்லை என்பது குறித்தும் அவர் பேசி இருந்தார். இதுகுறித்து அறிந்த நடிகர் மோகன்லால், ருக்மிணியை வீடியோ காலில் அழைத்துப் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போது உங்களை சந்திக்க வேண்டும் என ஆசையுடன் கேட்ட ருக்மிணியிடம், கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு, நேரில் வந்து சந்திப்பதாக நடிகர் மோகன்லால் உறுதி அளித்துள்ளார்.