'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
சீரியல்களில் நடித்து வந்தவர் தான் பஞ்சாபி நடிகை பாயல் ராஜ்புத். அதன்பின் பஞ்சாபி படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக அதை பார்த்து தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 படத்தில் கதாநாயகி வாய்ப்பு தேடி வந்தது. அந்தப்படம் ஹிட்டாகவே, தெலுங்கு ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டார் பாயல் ராஜ்புத். இந்த நிலையில் தற்போது அவர் மீது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் ஆந்திர மாநிலம் எடாப்பள்ளி நகரத்திலுள்ள ஒரு நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் பாயல் ராஜ்புத். அப்போது அவர் முக கவசம் அணிந்திருக்கவில்லை. சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. அவரைக் காண்பதற்காக அங்கே மிகப் பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் முண்டியடித்ததால் கொரோனா விதிமுறைகள் காற்றில் பறந்தன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் அளித்ததன் பேரில் தற்போது கடை நிர்வாகத்தின் மீதும் பாயல் ராஜ்புத் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.