ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் என்று அழைக்கப்பட்டாலும், தமிழ், ஹிந்தி மொழிகளிலும் நடித்து இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகராக அறியப்படுபவர் சிரஞ்சீவி. இன்று தனது 67வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
சிரஞ்சீவியின் இன்றைய பிறந்தநாள் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒரு நாளாக அமைந்துள்ளது. நேற்றும், இன்றும் அவருடைய புதிய படங்களின் அப்டேட்ஸ் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இதற்கு முந்தைய பிறந்தநாட்களில் இத்தனை படங்களின் அப்டேட்ஸ் கண்டிப்பாக வந்திருக்காது.
மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளிவந்த 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்திற்கு 'காட்பாதர்' என்ற பெயரை வைத்து டைட்டில் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இன்று, தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்திற்கு 'போலா சங்கர்' என்ற பெயரை வைத்து, டைட்டிலின் மோஷன் போஸ்டரை மகேஷ் பாபுவை வெளியிட வைத்துள்ளனர்.
அடுத்து இன்று மாலை மெஹர் ரமேஷ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் மற்றொரு புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட உள்ளனர். இவற்றோடு சிரஞ்சீவி நடித்து முடித்துள்ள 'ஆச்சார்யா' படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என்று தெரிகிறது.