மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
குழந்தைகளை பெரிதும் கவர்ந்த காட்ஸில்லா மற்றும் காங் பட வரிசையில் கடந்த 2019ல் வெளியான 'காட்ஸில்லா ; கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் படத்தை அடுத்ததாக 'காட்ஸில்லா வெர்சஸ் காங்' என்கிற படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்தப்படம் இந்தியாவிலும் தியேட்டர்களில் வெளியான சமயத்தில் தான் கொரோனா இரண்டாவது அலை தீவிரமானதால், ஒரு குறிப்பிட்ட நாட்களே தியேட்டர்களில் இந்தப்படம் ஓடியது.
இதை தொடர்ந்து தற்போது அமேசான் பிரைம் நிறுவனம் இந்தப்படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிட உள்ளது. இதில் தமிழுக்கான முன்கதை சுருக்கத்திற்கு துல்கர் சல்மானும் தெலுங்கிற்கான முன்கதை சுருக்கத்திற்கு விஜய் தேவரகொண்டாவும் டப்பிங் பேசியுள்ளனர். இவர்கள் தங்கள் குரலில் கதை சொல்லும் ட்ரெய்லர் வீடியோவை தற்போது அமேசான் பிரைம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.