ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? |
தற்போது சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில நடித்து வரும் மகேஷ்பாபு, இதனைத்தொடர்ந்து திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். இதற்கான அறிவிப்பை கடந்த மாதமே வெளியிட்டனர். மேலும் இதற்கு முன்பு திரிவிக்ரம் இயக்கத்தில் நடித்துள்ள மகேஷ்பாபு, மீண்டும் மூன்றாவது முறையாக அவருடன் கைகோர்க்கப்போகிறார்.
இந்த படத்தில் மகேஷ்பாபு எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பதை திரிவிக்ரம் வெளியிடாதபோதும், இப்படத்தில் ரகசிய போலீஸாக மகேஷ்பாபு நடிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு போக்கிரி என்ற படத்தில் இதுமாதிரியான வேடத்தில் தான் நடித்திருந்தார் மகேஷ்பாபு. அந்த படம் வெற்றி பெற்றது. அதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது.