நகைச்சுவை நாயகனா? கதாநாயகனா? மக்களே கூறட்டும்; நடிகர் சூரி | ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் |
கொரோனா இரண்டாவது அலை பரவுவது தெரிந்தும், பல நடிகர்கள் துணிச்சலாக தங்களது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நடித்து வந்தார்கள். ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால் என சீனியர்களே படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட நிலையில் இளைஞர்கள் பற்றி சொல்லவா வேண்டும்.. அப்படி படப்பிடிப்பில் கலந்து கொண்ட மகேஷ்பாபு, ராம்சரண் ஆகியோர் தற்போது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்கள்.
ராம்சரண் தயாரித்து வரும் ஆச்சார்யா படக்குழுவில், சிரஞ்சீவியின் கேரவன் ட்ரைவராக பணியாற்றியவர், கொரோனா தாக்குதலால் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து ராம்சரண், சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர்.
அதேபோல தற்போது சர்க்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வந்தார் மகேஷ்பாபு. இந்தநிலையில் தனது பர்சனல் ஒப்பனைக்கலைஞர் மற்றும் படக்குழுவினர் சிலர் கொரோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்ததும், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, கொரோனா சோதனை மேற்கொண்டு தன்னுடையை குடும்பத்துடன் சேர்ந்து தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் மகேஷ்பாபு.