'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
மலையாள நடிகர்களில் கேரக்டருக்கு தகுந்த மாதிரி உடல் எடையை கூட்டி, குறைத்து நடித்து வருபவர் நடிகர் உன்னி முகுந்தன்.. பாகமதி படத்தில் அனுஷ்காவின் ஜோடியாக நடித்த இவர், உடற்பயிற்சிக்கென ஒருநாளின் சில மணி நேரங்களை தனியாக ஒதுக்கி வைத்து விடுபவர். அப்படிப்பட்டவர் தற்போது தொப்பையுடன், தான் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார்.
தொப்பை வளர்த்தது உண்மைதான் என்றாலும், இது அவர் தற்போது நடித்துவரும் மேப்படியான் என்கிற படத்துக்காக வளர்க்கப்பட்ட தொப்பை ஆகும். அதேசமயம் மூன்றே மாதங்களில் 93 கிலோவில் இருந்து 77 கிலோவுக்கு, அதாவது சுமார் 16 கிலோ எடையை குறைத்து, அந்த தொப்பையை கரைத்து மீண்டும் பழையபடி கட்டுக்கோப்பான உடலமைப்பிற்கு மாறியுள்ள புகைப்படத்தையும் ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார் உன்னி முகுந்தன்.
மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “இதேபோல உங்களில் யாராவது செய்ய முடியுமா..? உடல் எடையை கூட்டி குறைப்பது உடற்பயிற்சியால் மட்டும் அல்ல, அதற்கு மனப்பயிற்சியும் ரொம்பவே முக்கியம்” என்று கூறியுள்ளார்.