'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக கதாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தவர் கதாசிரியர் பி.பாலச்சந்திரன்(62). கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று(ஏப்., 5) காலமானார்.
மோகன்லால், மம்முட்டி நடித்த சில படங்களுக்கு கதை எழுதியுள்ள பாலச்சந்திரன், கடந்த 2016ல் துல்கர் சல்மான் நடித்த, விருதுகள் பல பெற்ற கம்மட்டிபாடம் திரைப்படத்திற்கு கதை எழுதியிருந்தார். ஒருபக்கம் கதாசிரியராக இருந்து கொண்டே, இன்னொரு பக்கம் குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து பயணித்து வந்தார் மேலும் கேரள சாகித்திய அகாடமி விருது கேரள சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
கடைசியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, மம்முட்டி நடிப்பில் வெளியான '1'' என்கிற படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பாலச்சந்திரன். கம்மட்டிபாடம் படத்தில் பணியாற்றியபோது இவருடன் நெருங்கிப் பழகிய நடிகர் துல்கர் சல்மான் இவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.