என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி | துல்கர் சல்மானுக்கு பறந்த திடீர் நோட்டீஸ்! | மகேஷ்பாபுவின் கிண்டலுக்கு பிரியங்கா சோப்ரா பதில் | புராண பின்னணியில் புதிய அனிமேஷன் பாகுபலி : டீசர் வெளியீடு | தென்னிந்திய சினிமா தான் 'பெஸ்ட்', ஹிந்தியில் 'ஸ்லோ': ஷ்ரத்தா தாஸ் | கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛மிடில் கிளாஸ்' : டீசர் வெளியீடு | இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் |

பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் விதமாக தெலுங்கில் தயாராகியுள்ளது கண்ணப்பா திரைப்படம். சீனியர் நடிகர் மோகன்பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தயாரித்து உள்ளார். மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புராண படமாக இது உருவாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் அடங்கிய ஒரு ஹார்ட் டிஸ்க் களவு போனதாக விஷ்ணு மஞ்சு பரபரப்பாக ஒரு செய்தியை வெளியிட்டார்.
சமீபத்திய திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசும்போது, “இது காணாமல் போனதன் பின்னணியில் உள்ள ரகு மற்றும் சரிதா என்கிற இருவரை அடையாளம் கண்டுபிடித்துள்ளோம். இவர்கள் இருவரும் மனோஜ் மஞ்சுவுடன் தொடர்புடையவர்கள். இது குறித்து மனோஜ் மஞ்சுவிடம் கேட்க பலமுறை தொடர்பு கொண்டும் அவர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. அதனை தொடர்ந்து தான் இவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை குடும்ப அளவில்தான் பேசி தீர்க்க வேண்டுமே தவிர, இப்படி செய்யும் தொழிலில் அதை காட்டக்கூடாது” என்று கூறினார்.
மோகன் பாபு மற்றும் விஷ்ணு மஞ்சு இருவருக்குமே மனோஜ் மஞ்சு மீது மோதல் போக்கு கடந்த சில வருடங்களாகவே இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட மோகன்பாபுவும், மஞ்சு மனோஜும் ஒருவரை ஒருவர் தாக்கியதாக மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.