மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வரும் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக இருக்கும் படம் 'தொடரும்'. நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் எவர்கிரீன் ஜோடியான இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற 'ஆபரேஷன் ஜாவா' மற்றும் 'சவுதி வெள்ளக்கா' ஆகிய படங்களை இயக்கிய கையோடு இவருக்கு மோகன்தால் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் தயாரித்துள்ளார்.
இந்த படத்திற்கு கதாநாயகியாக யாரை தேர்வு செய்யலாம் என நினைத்து பட்டியல் தயார் செய்தபோது அதில் ஜோதிகாவின் பெயரும் கூட இடம் பெற்று இருந்ததாம். ஆனால் கடைசியாக மலையாள மக்களின் மனதில் இடம் பிடித்த ஷோபனாவையே டிக் செய்துவிட்டார்கள் ரஞ்சித்தும் தருண் மூர்த்தியும். இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பது குறித்து இயக்குனர் ரஞ்சித், ஷோபனாவிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, “இந்த படத்தில் நான் நடிக்கிறேன். அதே சமயம் இடையில் கொஞ்ச காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்ததால், தற்போதைய இயக்குனர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது பற்றி தனக்கு தெரியவில்லை.. ஆதலால் சிறிய தயக்கம் இருகிறது” என கூறினாராம் ஷோபனா.
அதன் பிறகு இயக்குனர் தருண் மூர்த்தி இந்த கதையையும் அவரது கதாபாத்திரத்தையும் போனிலேயே சொன்னபோது அதற்கு சம்மதித்த ஷோபனா, எனக்கு எந்த விஷயம் என்றாலும் படப்பிடிப்பு தளத்தில் நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். அதன்படியே படப்பிடிப்பு தளத்தில் முதல் நாளன்று பூஜை முடிந்ததும் மோகன்லால், ஷோபனா இருவரும் இயக்குனர் தருண் மூர்த்தியிடம் வந்து இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.
அதற்கு தருண் மூர்த்தி தனது வீட்டில் பல காலமாக பார்த்து வந்த ஒரு தினசரி காட்சியான தனது பெற்றோர் சேலைகளை மடித்து வைக்கும் ஒரு காட்சியை ஷோபனாவையும் மோகன்லாளையும் வைத்து படமாக்கி உள்ளார். அந்த காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த படப்பிடிப்பு தினத்தன்று அங்கே வந்திருந்த தருண் மூர்த்தியின் அம்மா, தங்கள் வீட்டில் அன்றாடம் நடைபெறும் செயலான இந்த காட்சியை மகன் படமாக்கியதை பார்த்து பரவசப்பட்டு போனாராம்.