தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து | சாலைவாசிகளுக்கு போர்வை வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் | படப்பிடிப்பில் விபத்து: கொதிக்கும் எண்ணெய் கொட்டி சான்வி காயம் | 'தாதா சாகேப் பால்கே' விருது மலையாள சினிமா கலைஞர்களுக்கு சமர்ப்பணம்: மோகன்லால் | 'மதராஸி' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு | பிளாஷ்பேக்: 300வது படத்தை இசையால் தாலாட்டிய இளையராஜா | பிளாஷ்பேக்: அந்தக்கால வடிவேலு |
கர்நாடக மாநில திரைப்பட அகாடமி ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்தவகையில், 16வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா வருகிற மார்ச் 1 முதல் 8ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா மார்ச் 1ம் தேதியும், நிறைவு விழா மார்ச் 8ம் தேதியும் நடைபெறும். பெங்களூருவில் 8 நாட்கள் நடைபெறும்.
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 13 திரையரங்குகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு, திரைப்படத் துறைக்கு உதவும் வகையில் பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த திரைப்பட விழா தூதராக நடிகர் கிஷோரை கர்நாடக அரசு நியமித்து ஆணை பிறப்பித்துள்ளது.