தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

'புஷ்பா 2' படம் திரையிட்ட தியேட்டரில் ரேவதி என்ற பெண் உயிரிந்த வழக்கில் அல்லு அர்ஜூன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்தது. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காவல் நிலையம் சென்று விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. அதன்படி நேற்று சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜரானார்.
இன்னொருபுறம் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவன் தேஜ்ஜை பார்க்க அனுமதி கேட்டு போலீசில் அல்லு அர்ஜுன் மனு செய்திருந்தார். இதற்கு பதில் அளித்து போலீசார் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டிருப்பதாவது:
'மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீ தேஜ்ஜை காண வந்தால் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். இருப்பினும் நீங்கள் செல்ல விரும்பினால் காவல் நிலையத்துக்கும், மருத்துவமனைக்கும் முன்கூட்டியே தெரிவித்தால் வந்து செல்லும் வழித்தடத்தை ரகசியமாக வைத்து அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்' என நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அல்லு அர்ஜுன் சிறுவனை சந்திக்கும் திட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.




