'மிராய்' படத்திற்கு நீண்ட பதிவிட்டுப் பாராட்டிய அல்லு அர்ஜுன் | முன்பதிவில் 75 கோடி வசூலித்துள்ள 'ஓஜி' | ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டவராக நடித்த புது ஹீரோயின் | இசையமைப்பாளர் பரத்வராஜ்க்கு குறள் இசையோன் விருது : கனடா உலக திருக்குறள் மாநாட்டில் கவுரவம் | தீபாவளி போட்டியில் இன்னும் சில படங்கள் | பிளாஷ்பேக்: எஸ்.பி.முத்துராமனை ஏமாற்றிய 50வது படம் | சுபத்ரா ராபர்ட் கதை நாயகியாக நடிக்கும் 'மெல்லிசை' | ராம்லீலா நாடகத்திலிருந்து பூனம் பாண்டே நீக்கம் | விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி நாடகம் பார்க்க ஸ்பெஷல் ரயில் |
மலையாளத்தில் டிவி தொடர்கள் மற்றும் சினிமாவில் நடித்து வருபவர்கள் பிஜு சோபானம் மற்றும் ஸ்ரீகுமார். இவர்கள் இருவரும் தற்போது ஒரு மலையாள டிவி தொடரில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த தொடரின் படப்பிடிப்பின்போது இவர்கள் இருவரும் ஒரு நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அந்த நடிகை கொச்சி இன்போ பார்க் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிஜு சோபனம் மற்றும் ஸ்ரீகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'முத்துலட்சுமி' என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் சாரித் பாலப்பா. இவர் மீது கன்னட தொலைக்காட்சி நடிகை ஒருவர் பெங்களூரு ஆர்.ஆர்.நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சாரித் பாலப்பா என்னை காதலிப்பதாகக் கூறி அவரது ஆசைக்கு இணங்கும்படி என்னை வற்புறுத்தினார். ஆனால் நான் மறுக்கவே, என்னை தொடர்ந்து தொந்தரவு செய்தார். கூட்டாளிகளுடன் ஒருமுறை என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என்னை துன்புறுத்தினார். பணம் தராவிட்டால் எனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பரப்பிவிடுவதாக மிரட்டினார். அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சாரித் பாலப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.