ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
2024ம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவிற்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றுள்ளது. சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரபாஸ் ஜூனியர் என்டிஆர், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல திரை உலக பிரபலங்கள் தவறாமல் ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்களது ஓட்டை செலுத்தியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
இதில் ஜனசேனா என்கிற கட்சியை நடத்தி வரும் நடிகர் பவன் கல்யாண் பீத்தாபுரம் என்கிற தொகுதியில் சட்டசபை வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று மங்களகிரியில் உள்ள ஓட்டுச்சாவடியில் தனது மனைவியுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பவன் கல்யாண் அங்கிருந்து காரில் சென்று ஓட்டளித்தார்.
இதேபோல இயக்குனர் ராஜமவுலி வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் விமான நிலையத்திலிருந்து நேராக வாக்குச்சாவடிக்கு தனது மனைவி மற்றும் மகன் கார்த்திகேயாவுடன் வந்து தனது ஓட்டை செலுத்தினார். அதேபோல நடிகர் பாலகிருஷ்ணா மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது ஓட்டை செலுத்தினாலும் ஒரு கட்சியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக தோளில் துண்டு அணிந்திருந்தது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.