லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகர் மம்முட்டி சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆக்ஷன் கதைகளை தவிர்த்து, வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த நண்பகல் நேரத்து மயக்கம், காதல் : தி கோர், பிரம்ம யுகம் ஆகிய படங்களில் அவரது நடிப்புக்கும் துணிச்சலான முயற்சிக்கும் வரவேற்பு கிடைத்தது. அதேசமயம் கண்ணூர் ஸ்குவாட் என்கிற ஆக்ஷன் படத்திலும் நடித்து தனது ரசிகர்களை திருப்திப்படுத்தினார் மம்முட்டி. அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் டர்போ திரைப்படமும் முழுக்க முழுக்க ஆக்ஷனை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா, மதுர ராஜா என இரண்டு படங்களை இயக்கியவரும், புலி முருகன் பட இயக்குனருமான வைசாக் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி உள்ளது. வரும் மே 23ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படத்தில் மம்முட்டியின் கதாபாத்திரத்திற்கும் இந்த படத்திற்கு டர்போ என டைட்டில் வைக்கப்பட்டதற்கும் விளக்கம் அளித்துள்ள கதாசிரியர் மிதுன் மானுவேல் தாமஸ், “அதிக சக்தி கொண்ட என்ஜினை டர்போ என்ஜின் என சொல்வது போல மம்முட்டியின் ஜோஸ் கதாபாத்திரம் எக்ஸ்ட்ரா பவர் கொண்டது என்பதால் டர்போ ஜோஸ் என அழைக்கப்படும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனாலயே படத்தின் டைட்டிலும் டர்போ என்றே வைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.