பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
மலையாள திரையுலகில் கடந்த பல வருடங்களாக முன்னணி இயக்குனராக இருப்பவர் ஜோஷி. மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது மோகன்லால் நடிப்பில் ரம்பான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொச்சியில் இவர் வசிக்கும் பனம்பள்ளி நகரில் உள்ள வீட்டில் இருந்து சுமார் ஒரு கோடி மதிப்பிலான நகைகள் மர்ம நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து கிடைத்த தகவல்கள், சிசி டிவியில் பதிவான கார் விபரங்கள் ஆகியவற்றை வைத்து போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் பீகாரைச் சேர்ந்த முகமது இர்பான் என்பவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்பதும் அவர் கொள்ளையடித்த நகைகளுடன் பீகாரை நோக்கி காரில் சென்று கொண்டிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அந்த நபர் உடுப்பியில் உள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டு நகைகள் மற்றும் காருடன் கேரள போலீஸ் சார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த திருட்டில் இவர் மட்டும்தான் ஈடுபட்டுள்ளாரா அல்லது உள்ளூரில் இவருக்கு யாராவது உதவியாக செயல்பட்டுள்ளார்களா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.