ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மலையாளத்தில் சமீபகாலமாக சிறிய பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பையும், கோடிகளில் வசூலையும் வாரிக் குவித்து வருகின்றன. அதேசமயம் கடந்த வருடத்திற்கு முன்பு வரை சற்று இறங்கு முகத்தில் இருந்த நடிகர் மம்முட்டியின் படங்கள் கடந்த வருட இறுதியிலும், இந்த வருட துவக்கத்திலும் ஒவ்வொன்றாக வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த பிப்ரவரியில் வெளியான பிரம்மயுகம் படத்தில் ஒரு புதிய மம்முட்டியை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் அடுத்து அதிரடி ஆக்ஷன் படமாக மம்முட்டி நடிப்பில் உருவாகி வருகிறது டர்போ. ஏற்கனவே மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா, மதுர ராஜா என இரண்டு படங்களை இயக்கியவரும் புலிமுருகன் பட இயக்குனருமான வைசாக் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர்களது கூட்டணியில் மூன்றாவதாக இந்த படம் உருவாகி வருவதால் படம் குறித்த எதிர்பார்ப்பு இரு மடங்காக இருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜூன் 13ம் தேதி இந்த படம் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் சுனில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.