போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
கடந்த 2022 நவம்பர் மாதம் மலையாளத்தில் 'முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்' என்கிற படம் வெளியானது. நடிகரும் இயக்குனருமான வினீத் சீனிவாசன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக் என்பவர் இயக்கியிருந்தார். மருத்துவமனைகளில் இன்சூரன்ஸ் பணத்தை குறிவைத்து நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் விதமாக உருவாகி இருந்த இந்த படத்தில் வினீத் சீனிவாசன் ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.
படம் கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் கூட அதே போன்ற வரவேற்பை பெற்றது. இங்குள்ள பல பிரபல இயக்குனர்கள் இந்த படத்தை சிலாகித்து பாராட்டினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் தான் இந்த படத்தை நடிகர் பிரித்விராஜ் பார்த்துள்ளார். உடனடியாக இதுகுறித்து இயக்குனருக்கு தனது பாராட்டுக்களை சோசியல் மீடியா மூலமாக தெரிவித்துள்ளார் பிரித்விராஜ்.
“இந்த படம் வெளியான சமயத்தில் இருந்தே நான் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்டில் தான் இடம் பிடித்திருந்தது. ஆனாலும் சில காரணங்களால் என்னால் எப்படியோ பார்க்க முடியாமல் போய்விட்டது. இப்போதுதான் இந்த படத்தை பார்த்தேன். அவ்வளவு அற்புதமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறீர்கள். முகுந்தன் உன்னி என்னை ரொம்பவே கவர்ந்து விட்டான். தாமதமாக பார்ப்பதற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய அடுத்த படம் எப்போது வெளியாகும் என்கிற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.